இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

பரிமலை

ன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை புரட்டாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் ஆரம்பத்திலும் 5 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜை நடக்கும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தொடர்ந்து சபரிமலைக்குப் பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அவ்வகையில் இந்த மாத பூஜைகளில் கலந்துக் கொள்ளப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இம்மாதம் சிறப்புப் பூஜைகள், நெய் அபிஷேகம், படி பூஜை, உதய அஸ்தமன பூஜை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாத சிறப்பு பூஜைகள் முடிவடைந்த பிறகு வரும் 21 ஆம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு நடை மீண்டும் அடைக்கப்பட உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கும் போது பரீட்சார்த்த முறையில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை நடந்து வருகிறது.

மண்டல பூஜை காலத்தில் நவம்பர் 16 முதல் புதிய விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி