இன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறப்பு

பரிமலை

ன்று மாலை ஆவணி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  திறக்கப்படுகிறது.

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் பூஜைக்காகத் திறப்பது வழக்கமாகும். அவ்வகையில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.

இன்று மாலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையைத் திறக்க உள்ளார்.  அதைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டுக்கான பொறுப்பைத் தந்திரி கண்டரர் ராஜீவரர் ஏற்க உள்ளார்.  அதைத் தவிர வேறு பூஜைகள் எதுவும் இன்று நடக்காது.

நாளை 17 ஆம் தேதி அதாவது தமிழ் மாத ஆவணி மற்றும் மலையாள மாதப் பிறப்பன்று காலை  5 மணிக்கு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது.  மண்டபத்தில் கணபதி ஹோமம் நடைபெற உள்ளது

இந்த மாதம் 21 வரை நடக்கும் ஆவணி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

கார்ட்டூன் கேலரி