சூரிய கிரகணம் : சபரிமலை கோவில் டிசம்பர் 26 அன்று 4 மணி நேரம் மூடல்

பரிமலை

ரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் 4 மணி நேரம் மூடப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 17 ஆம் தேதி அன்று மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது.  தற்போது அங்கு கடும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.  இந்நிலையில் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது.  இந்த கிரகணம் காலை 8.06க்கு தொடங்கி காலை 11.13 வரை நிகழ உள்ளது.    இது குறித்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், ”வரும் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது.     இந்த  சூரிய கிரகணம் காலை 8.06 மணி முதல் 11.13 வரை நிகழ்கிறது. இதையொட்டி டிச.26-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்படும்.

ஆகவே சூரிய கிரகணத்துக்கு முன்பாகவே நெய் அபிஷேகம் உள்படத் தினசரி பூஜை முடிந்த பிறகு நடை அடைக்கப்படும்.

சபரிமலை தலைமை தந்திரி மகேஷ் மோகனரரு, சூரிய கிரகணம் சமயத்தில் கோயில் நடை திறந்திருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கோயில் நடையைக் குறிப்பிட்ட நேரத்துக்கு அடைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது   கிரகணத்தை முன்னிட்டு மாளிகைபுரம், மற்றும் பம்பை சன்னிதானங்களும் அடைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.