சபரிநாதன், தேவி நாச்சியப்பன்: தமிழக எழுத்தாளர்கள் 2 பேருக்கு சாகித்ய அகாடமி விருது!

டில்லி:

ந்த ஆண்டுக்கான  சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்களுக்கு விருது கிடைத்துள்ளது.

‘வால்’ என்ற கவிதை தொகுப்பு வெளியிட்ட சபரிநாதன்  யுவபுரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல  குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது தேவி நாச்சியப்பனுக்கு வழங்கப்படுகிறது

சபரிநாதன்  சென்னையில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருபவர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர்.இவர் 2011-ஆம் ஆண்டில் களம் காலம் ஆட்டம் மற்றும் 2016 ஆம் ஆண்டு வால் என்ற கவிதை தொகுப்பையும் எழுதியுள்ளார்.