நடிகை சபர்ணா கொலையா?: போலீசார் தீவிர விசாரணை

சென்னை:

சென்னையில், தான் வசித்த அபார்ட்மெண்ட்டில், நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்ட நடிகை சபர்ணா, கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்வதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2

சேலத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் சுகுணா. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை வந்தவர்,தனது பெயரை சபர்ணா என்று மாற்றிக்கொண்டார்.

திரை வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தமிழ் தொ.கா. நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கினார். பிறகு தெலுங்கு சானல்களில் அதிகம் பணியாற்றினார்.

இந்த நிலையில் மாயமோகினி என்ற மலையாள சீரியலிலும் நடித்தார்.   பிறகு தமிழ் சினிமாக்களில் சிறு வேடங்களில் நடித்துவந்தார்.  விஷால் நடித்த பூஜை படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

சென்னை மதுரவாயலில் ராஜிவ்காந்தி நகரில் உள்ள  அபார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். கணவரைப் பிரிந்து வாழ்ந்த சபர்ணாவுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சபர்ணா குடியிருந்த அபார்ட்மெண்டின் கதவு திறக்கப்படவே இல்லை.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல்தெரிவித்தனர்.

sabarna-7

போலீசார் வந்து சபர்ணா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, கை மணிக்கட்டு அறுக்கப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல், அழுகிய நிலையில் நிர்வாணமாக கிடந்தது.

காவல்துறை விசாரணையில் சபர்ணாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மதுப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தவிர, நிர்வாண நிலையில்  எவரும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள்.

ஆகவே நண்பர்களுடன் பிரச்சினை ஏற்பட்டு, அது கொலையில் முடிந்திருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணை நகர்வதாக, காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கார்ட்டூன் கேலரி