சபாஷ்: ஒரே மாதத்தில் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த சேலம் அரசு மருத்துவமனை…

சேலம்:
கொரோனா தொற்று ஊரடங்கு அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன்வராத நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிரசவம் போன்ற அத்தயாவசிய உதவிக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதத்தில் மட்டும் 1,080 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை டீன்  தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவல் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வந்தாலும், மக்களிடம் கொள்ளையடித்து வந்த தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆப்பு வைத்துள்ளது. பிரசவம் என்ற பெயரிலும், குழந்தைப்பேறு என்றும் ஏமாற்றி மக்களிடையே லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தை உருவாகது  என்று நினைத்திருந்த 70 சதவிகித தம்பதியினர் தற்போது குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். அதுபோல, சுகப்பிரசவம் நடக்காது என்று கூறப்பட்ட ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தற்போது சுகப்பிரசவம் மூலமே அழகான குழந்தைகளை பெற்றெடுத்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் பிரசவம் பார்க்க முன்வராத நிலையில், கர்ப்பிணிகள் அனைவரும் அரசு மருத்துவமனையையே நாடி வருகின்றனர். மருத்துவமனையின் ஒருபுறம் கொரோனா நோயாளிககுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், மற்றொருபுறம், மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரசவமும் நடைபெற்று வருகிறது.
சேலம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடத்தில் பிரசவம் பாதுகாப்புடன் பார்க்கப்படுகிறது
அதன்படி கடந்த மாதத்தில்   1,080 கர்ப்பிணிகளுக்கு அங்கு  பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில்,  477 கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமும், மீதமுள்ள கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை(சிசேரியன்) மூலம் குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும்,  கப்பேறு மருத்துவ துறை தலைவர் டாக்டர் சுபா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கர்ப்பிணிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவf மருத்துவமனை டீன் பாராட்டு தெரிவித்துள்ளார்.