மாடல் அழகியை கொன்ற முன்னாள் அமைச்சரின் மகனுக்கு மன்னிப்பு

டில்லி:

1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தனியார் பார்ட்டியில் மதுபானம் வழங்க மறுத்த மாடல் அழகி ஜெசிக்கா லால் என்பவரை முன்னாள் அமைச்சரும். முன்னாள் காங்கிரஸ் தலைவருமான வினோத் சர்மாவின் மகன் மானு சர்மா நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சர்மாவை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதித்து 2006ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகள் அவர் சிறை வாசம் அனுபவித்து வருகிறார். தற்போது நன்னடத்தை காரணமாக 5 ஆண்டுகள் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய அவரது வக்கீல் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கு ஏதுவாக கொலை செய்யப்பட்ட ஜெசிக்கா லாலின் சகோதரி சப்ரீனா லாலை அணுகி சர்மாவை மன்னிக்குமாறு கோரினர். இதையடுத்து அவருக்கு திகார் சிறை நிர்வாகத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். சர்மாவை முன்கூட்டியே விடுதலை செய்ய தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.