ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.
இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியுள்ளார். அவருக்குப் பலரும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும், திரையுலகினரும் , பொது மக்களும் கண்டித்துள்ளன.

இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சி. வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சாத்தான்குளம் சம்பவத்தைக் கேள்விப்படும் போது, இப்படிப்பட்ட காவல்துறையினரிடம் மாட்டினால் என்னாவது என்று நினைக்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது.
இந்தக் கொரோனா காலத்தில் எத்தனை காவல்துறையினர் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இந்தச் சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களைக் காப்பாற்ற நினைக்கிற யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்”.
இவ்வாறு இயக்குநர் எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.