சச்சின் விவகாரம்…முதல்வருக்கு புதிய சிக்கல்..

ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லாவை ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் திருமணம் செய்துள்ளார்

இது பழைய கதை.

புதிய கதைக்கு வருவோம்.

உமர் அப்துல்லாவும், அவர் தந்தை பரூக் அப்துல்லாவும் ஜம்மு- காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை எதிர்த்து சாரா அப்துல்லா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவர்கள் இருவர் மீதான  பொது பாதுகாப்பு சட்டத்தை, அரசு விலக்கிக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து உமர் அப்துல்லாவும் பரூக் அப்துல்லாவும்   விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சச்சின் பைலட் , ராஜஸ்தான் முதல் –அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி இருப்பதை, உமர் அப்துல்லா விடுதலையுடன் ஒப்பிட்டு சத்தீஷ்கர் முதல் –அமைச்சர் பூபேஷ் பாகெல் ஒரு கருத்து தெரிவித்தார்.

‘’பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உமர் அப்துல்லா விடுதலை ஆகி விட்டார். ஆனால் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்ட மெஹ்பூபா முப்தி இன்னும் சிறையில் இருக்கிறார். ஒருவேளை சச்சின் பைலட்டின் மைத்துனர் என்பதால் , உமர் விடுதலை செய்யப்பட்டுள்ளாரோ?’ என பூபேஷ் பாகெல், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வினா எழுப்பி இருந்தார்.

இதனால் கொந்தளித்துள்ள உமர் அப்துல்லா, சத்தீஷ்கர் முதல்வர் மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்துள்ளார்

இந்த பிரச்சினையில் பூபேஷ் பாகெல் அளித்த விளக்கத்தை ஏற்க, உமர் அப்துல்லா மறுத்து விட்டார்..

-பா.பாரதி.