கங்குலியைத் தொடர்ந்து களத்தில் இறங்குகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

மும்பை: தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள 5,000 பேர் உண்ணும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வழங்கவுள்ளார் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அப்நலாயா என்ற தொண்டு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது; ஊரடங்கு காலத்தில், அவதிக்குள்ளாகியுள்ள அப்நலாயாவிற்கு உதவி செய்ய முன்வந்ததற்கு சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

5000 பேர் ஒரு மாதத்திற்கு சாப்பிடத் தேவையான ரேஷன் பொருட்களை சச்சின் டெண்டுல்கர் தர உள்ளார். இன்னும் ஏராளமானோர், உங்களது ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு நன்றி தெரிவித்து சச்சின் டெண்டுல்கர் பதிலுக்கு வெளியிட்டப் பதிவில் கூறியுள்ளதாவது; இந்த நெருக்கடியான காலத்தில், தேவைப்படுவோருக்கு சேவையைத் தொடரும் வகையில், அப்நாலயாவிற்கு எனது வாழ்த்துகள்! உங்களின் சிறந்தப் பணி தொடரட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

You may have missed