நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி கைது…..!

--

நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் காவல்துறையினர் மும்பை விமான நிலையத்தில் சச்சின் ஜோஷியை கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 80 குட்கா பெட்டிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் செய்த விசாரணையில், சச்சின் ஜோஷியும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது.

துபாயில் வசிக்கும் ஜோஷி எப்போது இந்தியா வந்தாலும் காவல்துறைக்கு தகவல் அனுப்பக் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை (Look out circular) விடப்பட்டிருந்தது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நோட்டீஸ் தரப்பட்டபின் விடுவிக்கப்பட்டதாக தெலங்கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.