எம்.பி. பதவியை டெண்டுல்கர் ராஜினாமா செய்ய வேண்டும்!! சமாஜ்வாடி திடீர் போர்க்கொடி
டெல்லி:
அவைக்கு வர விருப்பம் இல்லாத டெண்டுல்கர், நடிகை ரேகா உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.பி. அகர்வால் பேசினார்.
ராஜ்யசபா கூட்டம் இன்று நடந்தது. இதில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. அகர்வால் ராஜ்யசபாவில் பேசுகையில்,‘‘ ராஜ்யசபா நியமன உறுப்பினர்கள் அவைக்கு வருவதில்லை. கூட்டத் தொடர் நிறைவடையவுள்ள நிலையில் கூட அவர்களை பார்க்க முடியவில்லை. அது டெண்டுல்கராக இருந்தாலும் சரி, நடிகை ரேகாவாக இருந்த £லும் சரி. அனைவருக்கும் இது பொருந்தம். அவையில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் பதவியை ராஜின £மா செய்துவிட வேண்டும்’’ என்றார்.
‘‘அவர்கள் தொடர்ந்து வராமல் இருப்பதை பார்த்தால் அவையில் கலந்துகொள்ள அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
டெண்டுல்கர், ரேகா உள்பட 12 நியமன உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். ஒலிம்பிக் பாகிசிங் வீரர் மேரி காம், பத்திரிக்கையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, பெண் தொழிலதிபர் அனு அகா இதில குறிப்பிடதகு ந்தவர்கள்.