மும்பை : சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் மறைவு

மும்பை

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளருமான ரமாகாந்த் அச்ரேகர் மரணம் அடைந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமாகாந்த் அச்ரேகர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1990 ஆம் வருடம் துரோணாச்சாரியர் விருது பெற்றவர். அத்துடன் 2010 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டது. இவர் மும்பை நகரில் தரில் உள்ள சிவாஜி பார்க் ரெசிடென்ஸ் என்னும் பகுதியில் வசித்து வந்தார்.

சுமார் 87 வயதாகும் இவர் உலகப் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ஆவார். சச்சினை அவருடைய சகோதரர் அஜித் அச்ரேக்கரிடம் அறிமுகம் செய்து வைத்தார். சச்சினுக்கு மட்டுமின்றி பிரவின் ஆம்தே, வினோத் காம்ப்ளி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரருக்கு இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக அவர் நோய் வாய்ப்பட்டிருந்தார். அவர் நேற்று மூப்பு காரணமாக மும்பையில் மரணம் அடைந்துள்ளார். அவர் மறைவால் கிரிக்கெட் உலகம் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.