மும்பை:

சிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்  இணைந்துள்ளார். ஐசிசி.யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த இந்தியாவின் 6வது இந்திய வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் கடந்த ஆண்டு, இந்தியாவின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் இணைக்கப்பட்டார். இந்த ஆண்டு சச்சின் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்,  கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள சாதனையாளர். கிரிக்கெட் உலகின்  பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையுடன்,கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன்,  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்தவர் என்ற சாதனையும் இவரையேச் சாரும்.

அப்பேற்பட்ட கிரிக்கெட் ஜாம்பவானை கவுரவிக்கும் வகையில் ஐசிசி இந்த ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம் பெற்ற இந்திய வீரர்கள்:

பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009), கபில் தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018) ஆகியோர்.  தற்போது அந்த வரிசையில் இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர் 6 வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

இநத் ஆண்டு சச்சினுடன் சேர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொணால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை கேதரின் ஃபிட்பாட்ரிக் ஆகியோரும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்