சிறுவர் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்கும் சச்சின் மற்றும் காம்ப்ளி

புனே

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி இணந்து புனேவில் சிறுவர் கிரிக்கெட் பயிற்சி மையம் தொடங்க உள்ளனர்.

இளம்புயல் என புகழப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிற்கு மாநிலங்களவை உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

தற்போது இவர் தனது நண்பரும் தனது சமகால கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை தொடங்க உள்ளார். அதற்காக இவர் லண்டனில் உள்ள கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி மையத்தை நடத்த எண்ணி உள்ளார்.

இந்த மையத்துக்கு டெண்டுல்கர் மிடில் செக்ஸ் கிரிக்கெட் அகாடமி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தின் முதல் கட்ட பயிற்சி வரும் நவம்பர் 1 முதல் 4 வரை டி ஒய் பாடில் அரங்கில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிற்சிக்கு சிறுவர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அடுத்தபடியாக புனேவில் உள்ள பிஷப் பள்ளியில் நவம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரையிலும் 17 முதல் 20 ஆம் தேதி வரையிலும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது.