ஹர்பஜன் சிங்குக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சச்சின்
மும்பை
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருவதால் பல முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகளை தமிழில் பதிந்து வருகிறார். ஹர்பஜனின் தமிழ் பதிவுகளுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களுக்கு சமமாக இவருடைய தமிழ் பதிவுகளுக்கும் ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.
அவர் பல கருத்துக்களை நகைச்சுவை கலந்து அளிப்பது பலருக்கு பிடித்துள்ளது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்குக்கு பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை டிவிட்டர் மூலம் பதிந்து வருகின்றனர்.
இந்த வாழ்த்துக்களில் முக்கியமானது சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாள் வாழ்த்துக்களாகும். அவர் ஹர்பஜன் சிங்குக்கு ஆங்கிலம் கலந்த தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.