சச்சின்….விவேகானந்தர்..ஷோலே.. பெயர்களை மென்று விழுங்கிய ட்ரம்ப்..

‘அகமதாபாத்தில் என்னை வரவேற்க 1 கோடி பேர் காத்திருக்கிறார்கள்’’ என்று அமெரிக்காவில் ஊர் ஊராக சென்று சொல்லி வந்தார், அதிபர் ட்ரம்ப்.
ஆனால் இந்தியா வந்த அவருக்கு ஏமாற்றம் தான்.

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடந்த மோடேரா ஸ்டேடியம் வரை ஒன்று அல்லது அதிகம் போனால் இரண்டு லட்சம் பேரே திரண்டிருந்தனர்.
இதனால் ஏற்பட்ட விரக்தியோ என்னவோ தெரியவில்லை, நம் ஊர் ஆட்களை பாராட்டி புகழ்ந்த ட்ரம்ப், உச்சரிப்பில் அவர்கள் பெயரை மென்று தின்று விட்டார்.

அந்த ஸ்டேடியத்தில் தனது பேச்சை அற்புதமாக ஆரம்பித்தார்.

‘’இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது.மதிக்கிறது.இதைச்சொல்ல 8 ஆயிரம் மைல்களை கடந்து வந்துள்ளேன்’’ என்று சொல்லி கை தட்டல்களை அள்ளிக்கொண்டவர், கிரிக்கெட், சினிமா மற்றும் ஆன்மீகத்தில் வரலாறு படைத்தவர்களை பாராட்டி பேசியபோது, உச்சரிப்பில் கோட்டை விட்டார்.

Sachin – பெயரை உச்சரிக்கும் போது soo-chin என்றார்.  Vivekananda என்பது ட்ரம்ப் வாயில் வரவில்லை. Vivekamanan என்று உச்சரித்த ட்ரம்ப், sholay சினிமாவை Soojay என்றும் வேதம் ( Vedas) என்பதை vestes என்றும் உச்சரிக்க-

ஸ்டேடியத்தில் இருந்த கூட்டம் கொஞ்சம் நெழிந்தது நிஜம்.

-ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி