உணவு மோசம் என்று கூறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட ராணுவவீரர்: வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி

--

வாரணாசி:

ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர், நாடாளுமன்ற தேர்தலில்  மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கி உள்ளார்.

இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவை  தேஜ்பதூர் யாதவ் எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ராணுவ அமைச்சகம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தேஜ் பகதூர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தேஜ் பதூர் யாதவ்  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியவர்,  “தேர்தலில் போட்டியிடுவது குறித்து நீண்ட நாட்களாக யோசித்து வந்தேன். பாதுகாப்பு படைகளுக்கு எந்த நன்மையும் செய்யாத நரேந்திர மோடிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தேர்தலில் போட்டியிட உள்ளேன் என்றவர், விவசாயிகளுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையிலும் எனது தேர்தல் பிரச்சாரம் அமையும்” என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே வாரணாசி தொகுதியில் பிரியங்கா பிரசாரத்தில் அரண்டுபோய் கிடக்கும் பாஜகவினர், தற்போது தேஜ்பகதூர் யாதவும் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.