சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் பாலிவுட்டில் வாரிசு அரசியல் குறித்த கருத்துகள் கடுமையாக எதிரொலித்து வருகின்றன.

இதனிடையே, மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜா பட் நடித்திருக்கும் ‘சடக் 2’ படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தது. இந்தப் படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இதனால் #UninstallHotstar என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்தார்கள்.

இந்நிலையில் ‘சடக் 2’ படத்தின் ட்ரெய்லர் இன்று (ஆகஸ்ட் 12) காலை வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் வெளியாகி 12 மணி நேரத்துக்குள் 1.5 மில்லியன் டிஸ்லைக்குகளைப் பெற்றுள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.