உறையவைக்கும் பனிமலையில்.. உலவித்திரியும் சந்நியாசி… வீடியோ

இமயமலையில் ஆள் அரவமற்ற உறையவைக்கும் பனிப்பிரதேசத்தில் பரதேசியாய் சுற்றித்திரியும் ஒரு சந்நியாசியை இந்திய ராணுவ வீரர்களின் காமிராவில் காட்சிப்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

உடலில் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு, அரைநிர்வாணமாய் பூங்காவில் சுற்றிவருவது போல் சுற்றித்திரியும் அவர், மைனஸ் 45 டிகிரி (-45° C) தாழ்வெப்பநிலையிலும், குளிப்பதற்காக அங்கு தண்ணீர் தேடுவது வியப்பாக உள்ளது.

பனி மலை என்று சொன்னாலே நடுங்க ஆரம்பிக்கும் பலருக்கு, பணியில் உட்கார்ந்து தியானம் செய்யும் இவரை பார்க்கும் போது, எத்தனை உடல் கட்டுப்பாடு இவருக்குள் என்று ஆச்சர்யமூட்டவைக்கிறது.