சென்னை,

ராஜாவின் நண்பர் மறைந்த  சாதிக் பாட்சா மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர்கள்  மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

2ஜி முறைகேடு வழக்கில் தற்போது விடுதலையாகி உள்ள  ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா. இவரிடம் ராஜா குறித்து நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையை தொடர்ந்து. கடந்த 2011-ம் ஆண்டுஅவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மறைந்த சாதிக் பாட்சாவின் மனைவி ரேகாபானு,  வழக்கறிஞர்கள் கவுதமன், குமார் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில், வழக்கறிஞர்கள்  இருவரும் முன்ஜாமீன் பெற்றனர்.

அதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் இருவரும்  தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘எங்களுக்கு வழக்கறிஞர்  கட்டணம் தராமல் ஏமாற்றிய கெவின் என்பவரது தூண்டுதலின் பேரில் தான் ரேகாபானு எங்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து விசாரிக்காமல், புகார் கொடுத்த அடுத்த சில மணி நேரத்தில், அவசர கதியில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பதாக கூறினார்.