சாதிக் மரணம்…  தமிழக காவல் துறை அமைதி காப்பது ஏன்? : தடா ரகீம் கேள்வி

சாதிக் பாட்சா
சாதிக் பாட்சா

“ஆ.ராசாவின் 2ஜி நண்பர் சாதிக் பாட்சாவை தாங்களே கொன்றதாக  அரியலூரைச் சேர்ந்த பிரபாகரன் வெளிப்படையாக தெரிவித்தும்   தமிழக காவல் துறை அமைதி காப்பது ஏன்” என்று  இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரகிம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“திமுக முன்னாள் மத்திய அமைச்சர்  ஆ. ராசாவின் உதவியாளராக இருந்த சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்ததாக காவல் துறை வழக்கு  பதிவு செய்து அமைதியாக இருந்தது.

இந்நிலையில் ஆ.ராசாவின் 2 G ஊழல் வழக்கு சிபிஐ விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்த சாதிக்பாட்சாவை கொலை செய்தது நான் தான் என திருச்சி பத்திரிக்கையாளர்களிடம்  அரியலூரை சேர்ந்த பிரபாகரன் என்ற வாலிபர் தெரிவித்தார்..

மேலும் ஜாபர்சேட் கழுத்தை நெரிக்க, நான் கால்களை பிடிக்க ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஸ்குமார் வயிற்றின் மேல்  உட்கார்ந்து கொள்ள சாதிக்பாட்சா கொலை டி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடந்நது என பிரபாகரன் பேட்டி அளித்துள்ளார்.

பிரபாகரனை கைது செய்து வழக்கின் உண்மை தன்மையை நீதியின் முன் நிறுத்தி நிருபிக்க வேண்டும். ஆனால் தமிழக காவல்துறை மவுனம் காப்பதின் மர்மம் என்ன” என்று அந்த அறிக்கையில் கேட்டிருக்கிறார்  அப்துல் ரகிம்.