சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு : சயீத் அஜ்மல் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் சுழல் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல்.  40 வயதான இவர் இதுவரை 35 டெஸ்ட் மேட்சுகளில் விளையாடி 184 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார். இருவது ஒவர் போட்டிகளில் 85 விக்கட்டுகளை 61 போட்டிகளில் வீழ்த்தி உள்ளார்.

தற்போது நடைபெறும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடருடன் தாம் ஒய்வு பெற உள்ளதாக அஜ்மல் தெரிவித்துள்ளார்.  தற்போது அவர் ஓய்வுப் பற்றி, “நான் மகிழ்வுடன் ஓய்வு பெறுகிறேன்.    எனது கிரிக்கெட் வாழ்க்கையை முழு திருப்தியுடன் முடித்துக் கொள்ளுகிறேன்.    நான் நிர்ணயித்த இலக்குகளை எட்டி விட்டேன்.   அதுவே எனக்கு பூரண திருப்தி” எனக் கூறி உள்ளார்.

அஜ்மல் இருமுறை விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக சர்ச்சையில்  சிக்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.