காவல் நிலையத்துக்கும் காவி வண்ணம் பூசும் பாஜக அரசு

க்னோ

த்திரப் பிரதேசம் லக்னோ நகரில் பழமையான காவல் நிலையம் ஒன்றுக்கு காவி வண்ணம் பூசப்பட்டது எதிர்கட்சியினரிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்ததில்  இருந்தே காவி நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.   பல்வேறு அரசு கட்டிடங்களுக்கு காவி நிறம் பூசப்பட்டு வருகிறது.  சமீபத்தில் ஹஜ் அலுவலகத்துக்கு காவி நிறம் பூசப்பட்டு எதிர்ப்பு கிளம்பியதால் அங்கு வெள்ளை நிறம் பூசப்பட்டது தெரிந்ததே.

தற்போது லக்னோவின் கைசர் பாக் பகுதியில் உள்ள பழமையான காவல் நிலையத்துக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது.   இதுவரை மற்ற காவல் நிலையங்களைப் போல் சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு இருந்த இந்த காவல் நிலையக் கட்டிடத்தின் சில பகுதிகளும் தூண்களும் காவி நிறமாக மாறி உள்ளன.    அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர் உபாத்யாய், “புதிப்பிக்கும் பணி இரண்டரை மாதங்களாக நடந்து தற்போது வண்ணம் பூசப்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளார்.   காவி நிறம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

அரசின் இந்தச் செயல் எதிர்கட்சிகளிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   பல எதிர்கட்சித் தலைவர்கள் இதற்கு கண்ட்னம் தெரிவித்து வருகின்றனர்.   சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளரான சுனில் சிங் சஜன், “பாஜக அரசு மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் தோல்வி அடைந்துள்ளது.   அதை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்பவே பாஜகவினர் இந்த காவி நிற அரசியலில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறி உள்ளனர்.