புதுடெல்லி:
ந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்ரசால் ஸ்டேடிய சண்டையில் இருதரப்பு மல்யுத்த வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்ததோடு, 23 வயது சாகர் ரானா என்ற மல்யுத்த வீரர் உயிரிழந்தார்.

தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சுஷில்குமார் கூறிவந்தாலும் அவர் ஏன் தலைமறைவானார் என்பது சந்தேகங்களை கிளப்ப அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. சுஷில் குமார் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

“அவர்கள் எங்கள் மல்யுத்த வீரர்கள் அல்ல. கடந்த இரவு இந்தச் சம்பவம் நடந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்டேடியத்துக்குள் குதித்தனர். சண்டையிட்டனர், எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை” என்று சுஷில் குமார் தெரிவித்திருந்தார். .

இந்த வழக்கில் வழக்கில் தலைமறைவாக உள்ளார் சுஷில் குமார். இளைஞர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நிலையில் சுஷில்குமாருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.