சென்னை:

டன் வளைகுடா பகுதியில் உருவாகி உள்ள சாகர் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது,

வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறினார்.

மேலும், ஏடன் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து வருகிறது. இதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள என்று தெரிவித்தார்.

தற்போது இந்தப் புயலானது ஏமன் கிழக்கே 400 கி.மீ., தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து சொல்லக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதனால் மீனவர்கள், தென்மேற்கு அரபிக் கடலில் ஏமன் ஓட்டிய பகுதிகளுக்கு அடுத்த 2 நாள் செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் , வெப்பசலனம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி ஒரிரு இடங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.