ஞ்சாவூர்

ஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சகாயம் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்கள் மதுப்பழக்கத்து அடிமையாவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் பழக்கத்தினால் வீணாகக்கூடிய இளைஞர்களின் சக்தியை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ வேண்டுமென்றால் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நாம் வாழும் சமூகம் நேர்மையாக இருந்தால்தான் அரசியல் தலைமையும் நேர்மையாக இருக்கும். ஆகவே இளைஞர்கள் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். அவர்கள் தலைமை பண்புகளை ஏற்க வேண்டும்.

மணல் உள்ளிட்ட இயற்கை வளம் கொள்ளை போவதைத் தடுத்தே ஆக வேண்டும். அரசு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு குறித்து எனது மனசாட்சிபடி விசாரணை செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அளித்துவிட்டேன். இனி அவைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.