மாதொருபாகன் நாவலின் ஆங்கில பதிப்புக்கு சாகித்ய அகாடமி விருது!

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் ஆங்கில மொழியாக்கத்திற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

மாதொருபாகன் நாவலின்ஆங்கில மொழி பெயர்ப்பு நூலான “ஒன் பார்ட் வுமன்”க்கு, “சாகித்ய அகாடமி” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்புக உள்ளா பெருமாள் முருகனின்   “மாதொரு பாகன்” நாவலில் குழந்தைகள் இல்லாத கவுண்டர்  இன பெண்களை பற்றி அவதூறாக கூறியுள்ளதாக பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

அதைத்தொடர்ந்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தியும், நூலை எரித்தும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாதொரு பாகன்,  நாமக்கல் வருவாய்த்துறை அலுவலகத்தில் அரசு அதிகாரத்தினால்  சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதன் காரணமாக  தனது அனைத்து எழுத்துக்களையும் திரும்பப் பெறுவதோடு இலக்கிய வாழ்வையே முடித்துக் கொள்வதாக பெருமாள் முருகன் அறிவித்தார்.

அந்த வகையில் ‘மறுபிறப்பில்’ நம்பிக்கையற்றவனாகிய தான் ‘இறந்து விட்டதாக’வும் கூறினார்.

இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2010-ல் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட  இந்த நாவலின் ஆங்கில வடிவம் “One part woman” 2013-ல் வெளியானது.

தற்போது அந்த நாவலின் ஆங்கில பதிப்பிற்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எழுத்தாளர்  பெருமாள் முருகன் 1996ம் ஆண்டு பிறந்தவர்.  இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். ‘

தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இவர் பெற்றோர் பெருமாள், பெருமாயி. தன் தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார்.

இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.  காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியில் வெளியாகியுள்ளது. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.