எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிப்பு

பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் ஏப்ரல் 13, 1966 அன்று பிறந்த இவரது பெற்றோர் சண்முகம் – மங்கையர்க்கரசி.  தற்போது எஸ்.ராமகிருஷ்ணன் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இவரது முதல் கதையான “பழைய தண்டவாளம்” கணையாழி இதழில் வெளியானது.  ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வாசகர்களைக் கடந்து அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு பெற்றது.

இவரது சிறுகதைகள் ஆங்கிலம்,  பிரென்ச், , கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

“அட்சரம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்

கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது  தாகூர் இலக்கிய விருது,  ஞானவாணி விருது தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது 2001, ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது 2008,  கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது 2011 உட்பட பல விருதுகளை எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்போது  சஞ்சாரம் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அவர் எழுதிய படைப்புகள்…
புதினங்கள்

·         உப பாண்டவம்

·         நெடுங்குருதி

·         உறுபசி

·         யாமம்

·         துயில்

·         நிமித்தம்

·         சஞ்சாரம்

·         இடக்கை

பிதின்

சிறுகதைத் தொகுப்புகள் 
·         எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்

·         நடந்துசெல்லும் நீரூற்று

·         பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

·         அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

·         நகுலன் வீட்டில் யாருமில்லை

·         புத்தனாவது சுலபம்

·         வெளியில் ஒருவன்

·         காட்டின் உருவம்

·         தாவரங்களின் உரையாடல்

·         வெயிலை கொண்டு வாருங்கள்

·         பால்ய நதி

·         மழைமான்

·         குதிரைகள் பேச மறுக்கின்றன

·         காந்தியோடு பேசுவேன்

·         என்ன சொல்கிறாய் சுடரே

கட்டுரைத் தொகுப்புகள்

·         விழித்திருப்பவனின் இரவு

·         இலைகளை வியக்கும் மரம்

·         என்றார் போர்ஹே

·         கதாவிலாசம்

·         தேசாந்திரி

·         கேள்விக்குறி

·         துணையெழுத்து

·         ஆதலினால்

·         வாக்கியங்களின் சாலை

·         சித்திரங்களின் விசித்திரங்கள்

·         நம் காலத்து நாவல்கள்

·         காற்றில் யாரோ நடக்கிறார்கள்

·         கோடுகள் இல்லாத வரைபடம் – உலகம் சுற்றிய பயணிகளைப் பற்றிய கட்டுரைகள்

·         மலைகள் சப்தமிடுவதில்லை

·         வாசகபர்வம்

·         சிறிது வெளிச்சம்

·         காண் என்றது இயற்கை

·         செகாவின்மீது பனி பெய்கிறது

·         குறத்தி முடுக்கின் கனவுகள்

·         என்றும் சுஜாதா

·         கலிலியோ மண்டியிடவில்லை

·         சாப்ளினுடன் பேசுங்கள்

·         கூழாங்கற்கள் பாடுகின்றன

·         எனதருமை டால்ஸ்டாய்

·         ரயிலேறிய கிராமம்

·         ஆயிரம் வண்ணங்கள்

·         பிகாசோவின் கோடுகள்

·         இலக்கற்ற பயணி

திரைப்படம் குறித்த நூல்கள் 
·         பதேர் பாஞ்சாலி – நிதர்சனத்தின் பதிவுகள்

·         அயல் சினிமா

·         உலக சினிமா

·         பேசத்தெரிந்த நிழல்கள்

·         இருள் இனிது ஒளி இனிது

·         பறவைக் கோணம்

·         சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்

 குழந்தைகள் நூல்கள் 

·         கால் முளைத்த கதைகள்

·         ஏழு தலை நகரம்

·         கிறுகிறு வானம்

·         லாலிபாலே

·         நீளநாக்கு

·         தலையில்லாத பையன்

·         எனக்கு ஏன் கனவு வருது

·         காசுகள்ளன்

·         பம்பழாபம்

·         சிரிக்கும் வகுப்பறை

·         அக்கடா

உலக இலக்கியப் பேருரைகள் 
·         ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்

·         ஹோமரின் இலியட்

·         ஷேக்ஸ்பியரின் மெக்பெத்

·         ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்

·         தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்

·         லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா

·         பாஷோவின் ஜென் கவிதைகள்

வரலாறு 
·         எனது இந்தியா

·         மறைக்கப்பட்ட இந்தியா

நாடகத் தொகுப்புகள் 
·         அரவான்

·         சிந்துபாத்தின் மனைவி

·         சூரியனை சுற்றும் பூமி

நேர்காணல் தொகுப்புகள் 
·         எப்போதுமிருக்கும் கதை

·         பேசிக்கடந்த தூரம்

மொழிபெயர்ப்புகள் 
·         நம்பிக்கையின் பரிமாணங்கள்

·         ஆலீஸின் அற்புத உலகம்

·         பயணப்படாத பாதைகள்

தொகை நூல்கள் 
·         அதே இரவு, அதே வரிகள், (அட்சரம் இதழ்களின் தொகுப்பு)

·         வானெங்கும் பறவைகள்

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள நூல்கள் 
·         Nothing but water

·         Whirling swirling sky

பணியாற்றிய திரைப்படங்கள்  

·         சண்டைக்கோழி

·         பாகுபலி

·         ஆல்பம்

·         பாபா

·         தாம்தூம்

·         பீமா

·         உன்னாலே உன்னாலே

·         கர்ண மோட்சம்

·         மோதி விளையாடு

·         சிக்கு புக்கு

·         அவன் இவன்

·         யுவன் யுவதி