தெலுங்கு ’வேதாளம்’ படத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய் பல்லவி..

தெலுங்கு ’வேதாளம்’ படத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய் பல்லவி..

அஜீத் நடித்த வீரம், வேதாளம் ஆகிய இரு படங்களும் தெலுங்கில் தயாராக உள்ளது.

தெலுங்கு வேதாளம் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். அவரது தங்கையாக சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் அஜீத் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

இந்த படத்தை மேஹர் ரமேஷ் இயக்குகிறார். இப்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார், சிரஞ்சீவி. கொரோனா காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆச்சார்யா படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்த படத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதனை முடித்து விட்டு, வேதாளம் ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

இந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு வீரம் படத்தில் அஜீத் நடித்த வேடத்தில் நடிக்கவே விருப்பமாக இருந்தது. அவர் விரும்பிய மாதிரி, வீரம் தெலுங்கு படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

-பா.பாரதி