சூர்யா _ செல்வராகவன் கூட்டணியில் சாய் பல்லவி கதாநாயகி

செல்வராகவன் இயக்கவுள்ள சூர்யா நடிக்கும் படத்தில் சாய் பல்லவி கதநாயகியாக நடிக்க உள்ளார்.

பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் தென்னக ரசிகர்களைக் கவர்ந்தவர் சாய் பல்லவி.   அந்தப் படத்தில் மலர் என்னும் தமிழ்ப் பெண்ணாக இவர் நடித்தது பலரின் பாராட்டை பெற்றது.   தற்போது கரு என்னும் தமிழ்ப்படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி மாரி 2 படத்தில் நடித்து வருகிறார்.   அதைத் தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்படத்தில் சூர்யாவுக்கு  ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சூர்யா தற்போது நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகின்றன.   விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.   அதன் பிறகு செல்வராகவன் படத்தில் சூர்யா நடிக உள்ளார்.   ஜனவரியில் துவங்கப்படும் இந்தப் படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என அறுவிக்கப்பட்டுள்ளது.    இதர் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது