Random image

ஜெயலலிதா கதையில் சசிகலாவாக சாய் பல்லவியா? : புதிய தகவல்

சென்னை

எல் விஜய் இயக்கத்தில் தயாராக உள்ள ஜெயலலிதா வாழ்க்கைக் கதையில் சசிகலாவாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை படமாக்க உள்ளதாக பல இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். பாரதிராஜா, எ எல் விஜய், லிங்கு சாமி மற்ரும் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் இந்த அறிவிப்பை அளித்துள்ள்னர். பிரியதர்ஷினி இயக்க உள்ள ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நித்யா மேனன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

எ எல் விஜய் இயக்க உள்ள ஜெயலலிதா வாழ்க்கை கதையில் வித்யா பாலன் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் சசிகலா வேடத்தில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக புகழ் பெற்ற சாய் பல்லவியின் சமீபத்திய தமிழ் படமான மாரிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சாய் பல்லவியின் தரப்பில் இருந்து இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. பல தெலுங்கு இணைய தளங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மும்மொழிகளில் எடுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அத்துடன் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு இணைய தொடர் (வெப் சீரிஸ்) தயாரித்து வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.