மலர் டீச்சருக்கும் எம்சிஏவுக்கும் என்ன சம்மந்தம்?  செய்தியை படியுங்க

தராபாத்

லர் டீச்சராக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சாய் பல்லவி தெலுங்கில் எம்சிஏ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மலையாளப் படமான பிரேமம் படத்தில் தமிழ்ப்பெண் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் சாய் பல்லவி.   இவருக்கு இந்தப் படம் முழுவதும் தமிழ் வசனங்கள் மட்டுமே இருந்தது.  தமிழில் பாடல் காட்சிகளும் இருந்தன.

இவர் தெலுங்கில் பிடா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.  இன்னும் அது ரிலீஸ் ஆகவில்லை.  அதற்குள் எம்சிஏ என்னும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இந்தப்படத்தில் ஞானி ஹீரோ.   இது தவிர மேலும் பல தெலுங்கு படங்களுக்கான பேச்சுவார்த்தை சாய் பல்லவியுடன் நடந்து வருவதாக டோலிவுட் தெரிவிக்கிறது.

தமிழ் பெண்ணாக நடித்த சாய் பல்லவி தற்போது கரு என்னும் தமிழ்ப்படத்தில் ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார்.