மகேஷ் பாபு படத்தில் இணைந்த சாய் மஞ்ச்ரேகர்….!

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபங் 3’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சாய் மஞ்ச்ரேகர் , தற்போது மகேஷ்பாபு தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

26/11 மும்பை தாக்குதலில் வீரமரணம் அடைந்த கேரளாவைச் சேர்ந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கை பயோபிக் ‘மேஜர்’ என்ற திரைப்படமாக உருவாகிறது.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் நடிகர் மகேஷ்பாபு. சசி கிரண் டிக்கா இயக்கி வரும் இப்படத்தில் அதிவி ஷா, சாய் மஞ்ச்ரேகர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகிறது.