ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் – 2வது சுற்றில் நுழைந்தார் சாய்னா நேவால்!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் பெண்கள் ஒற்றையர் போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளார்.

மேலும், இத்தொடரில் வேறுபல இந்தியர்களும் இரண்டாவது சுற்றில் நுழைந்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சற்றில், இந்தியாவின் சாய்னா நேவால், ஜெர்மனியின் யுவோன் லி -யை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-16, 21-14 என்ற செட் கணக்கில் சாய்னா நேவால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரனாய், மலேசியாவின் டேரன் லீவிடம் தோற்றார். இன்னொரு போட்டியில் இந்தியாவின் காஷ்யப், இடையிலேயே காயமடைந்து விலகியதால் பிரேசிலின் யகோர் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோவை வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் பிரனவ் சோப்ரா – சிக்கி ரெட்டி இணை, டென்மார்க்கின் மதியாஸ் – அலெக்ஸாண்ட்ரா இணையை வீழ்த்தியது.