ஹாங்காங் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சிந்து, சமீர்வர்மா; சாய்னா, அஜய் ஜெயராம் தோல்வி

sindhuஹாங்காங்கின் கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதி சுற்று நேற்று நடைபெற்றது. அப்போட்டியில், பி.வி.சிந்து கடும் போராட்டத்துக்குப் பின் 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியாவ் லியாங்-யை வீழ்த்தினார். ஆனால் சாய்னா நோவால் 8-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை சியூங் இயிடம் தோல்வியடைந்தார். இதனால் போடியிலிருந்து விலகிக்கொண்டார். சாய்னா நோவால் இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், அரையிறுதியில் சிந்துவுடன் மோதும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி போட்டியில் சமீர் வர்மா 21-17, 23-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் சாங் வெய் பெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். ஆனால் அஜய் ஜெயராம் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் லாங் ஆக்னஸிடம் தோல்வியடைந்தார்.