இந்திய பாட்மிண்டன் பிரபலங்கள் சாய்னா – பாருபள்ளி காஷ்யப் திருமணம்

தராபாத்

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால்  பாட்மிண்டன் வீரரான பாருபள்ளி காஷ்யபை திருமணம் புரிந்தார்.

தற்போது பிரபலங்களின் திருமண சீசன் என பத்திரிகையாளர்கள் கூறி வருகின்றனர். ரன்வீர் – தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா – நிக் ஜொன்ஸ் ஆகியோரின் திருமணம் அடுத்தடுத்து நடந்ததால் இவ்வாறு கூறி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபல திருமணமும் நடந்துள்ளது. இதன் மூலம் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ள பிரபலங்களின் திருமண சீசன் இது என்பது உறுதி ஆகி உள்ளது.

பிரபல பாட்மிண்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் மற்றும் சாய்னா நெஹ்வா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் உள்ள கோபிநாத் அகாடமி என்னும் பாட்மிண்டன் பயிற்சிக் கழகத்தில் ஒன்றாக பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். அப்போது இருவருக்கும் இடையில் உண்டான நட்பு அதன் பிறகு நெருக்கமானது. பல விழாக்களில் இருவரும் சேர்ந்து வருவது வழக்கமாகியது.

இருவரும் காதலித்து வருவதாக மற்றவர்கள் கூறிய போதிலும் சானியாவும் காஷ்யபும் இந்த செய்தியை ஒப்புக் கொள்ளவும் இல்லாமல் மறுக்கவும் இல்லாமல் மௌனம் காத்தனர். இந்நிலையில் காஷ்யப் மற்றும் சாய்னா இருவரும் நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் வந்தன.

ஆனால் இன்றே இருவருக்கும் திருமணம் நடந்துள்ளதாக சாய்னா தனது டிவிட்டரில் செய்தியை பதிந்துள்ளார். அத்துடன் தனது திருமண புகைப்படத்தையும் அவர் தனது செய்தியுடன் பகிர்ந்துள்ளார். சாய்னா மற்றும் காஷ்யபுக்கு டிவிட்டரில் ரசிகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.