பிரபல பேட்மிட்டன் வீராங்கனை சாய்னாவுக்கு  டிசம்பரில் திருமணம்!

பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்  இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம்  திருமணம் நடக்க இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். சுமார் 20 பட்டங்களை வென்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியவர்.

இவரும் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பும் ஐதராபாத் தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். அப்போது இவர்களுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதுவரை இதை  வெளிப்படையாக  அறிவிக்காத இவர்கள் தற்போது தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர்.

தங்களுக்கு டிசம்பர் 16 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சாய்னா நேவால் கூறும்போது, “2007- 2008ம் வருடம் முதல் நாங்கள் காதலித்து வருகிறோம். இது போட்டி நிறைந்த உலகம்.  இங்கே ஒருவருடன் நெருக்கமாவது கடினம். ஆனால் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் நெருங்கி பேசினோம். காதலை குடும்பத்தினரிடம் சொல்ல  தயக்கமாக இருந்தது. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வார்கள்.

அகவே அவர்களாகவே எங்களது நடவடிக்கைகளை வைத்து புரிந்துகொண்டனர். எங்கள் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

டிசம்பர் 20 ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க இருக்கிறோம். ஆகவே அதற்கு முன்பாக டிசம்பர் 16 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறோம்” என்று சாய்னா தெரிவித்தார்.