ஆசிய விளையாட்டுப் போட்டி : சாய்னா அரை இறுதியில் தோல்வி

ஜாகர்த்தா

ஜாகர்த்தாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியவின் சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018ன் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் அரையிறுதி போட்டி இன்று நடந்தது.    இதில் சீனா தைபேவின் தாய் ஜு யிங் மற்றும் இந்தியவின் சாய்னா நேவால் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் 21-17, 21-14 என்னும் நேர் செட்களில் சாய்னாவை தாய் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.   இந்த போட்டியில் சாய்னாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

தாய் ஜு யிங் பாட்மிண்டன் விளையாட்டில் உலகின் நெம்பர் 1 வீராங்கனை  என்பது குறிப்பிடத்தக்கது.