ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: சாய்னா நெவால், பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

saina-nehwal_a680b560-b147-11e6-97d4-77e8d9863aa4ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன், ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சாய்னா மற்றும் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

சீன ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் போர்ட்னிப்பிடம் சாய்னா தோற்றார். இப்போட்டியில், 12-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை தோற்கடித்து பலி தீர்த்துக்கொண்டார். அடுத்து சாய்னா, ஜப்பான் வீராங்கனை சயாக்கோ சாட்டோவுடன் மோத உள்ளார்.

அதேபோல், பி.வி.சிந்து 21-13, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா வீராங்கனை சுஸாந்தோ யூலியாவை தோற்கடித்தார். இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை யா சிங்குடன் மோத உள்ளார்.