போபால்:

த்திய பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சை சாமியாரினியான சாத்வி பிரக்யாவுக்கு எதிராக, கம்ப்யூட்டர் பாபா எனப்படும் பிரபல சாமியார் தலைமையில் ஏராளமான சாதுக்கள் களமிறங்கி உள்ளனர். இதன் காரணமாக பாஜக அரண்டுபோய் உள்ளது. அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்குக்கே தங்களது ஆதரவு என்று தெரிவித்து உள்ளனர்.

சர்ச்சைக்கு பேர் போனவர் சாத்வி பிரக்யாசிங் என்ற இளம் பெண்சாமியார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த காங்கிரஸ் தலைவர்  திக்விஜய் சிங் களமிறக்கப்பட்டு உள்ளார். அங்கு பரபரப்பான அரசியல் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், சாமியார் சாத்வி பிரக்யா சிங்கிற்கு எதிராக ஆயிரக்கணக்கான சாமியார்கள், கம்ப்யூட்டர் பாப எனப்படும் சாமியார் தலைமையில் களமிறங்கி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

போபாலில், இந்துத்துவாவை முன்னிறுத்தி, சாத்வி பிரக்யா சிங் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சினைகளையும் உருவாகி வருகிறார். சமீபத்தில் தேர்தல் ஆணையம் அவர் பேசுவதற்கு 2 நாட்கள் தடை விதித்திருந்த நிலையில், அதையும் மீறி பேசி வம்பை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார்.

இந்த நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்குக்கு ஆதரவாக  கம்ப்யூட்டர் பாபா எனப்படும் சாமியார் களமிறங்கி உள்ளார். திக்விஜய்சிங் குறித்து கூறிய கம்ப்யூட்டர் பாபா,  நர்மதாவின் நிஜமான பக்தர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங் தான் என்று கூறியவர், நானும் சரி, பிற சாமியார்களும் நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, ஜெயில் யாத்திரை நடத்துவது கிடையாது என்று காட்டமாக கூறி உள்ளார்.

மேலும்,. பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்க தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவராகும். ராமர் கோயில் கட்டப்படவில்லையேல், மோடி அரசாங்கமும் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில்,  இவ்வாறு, நர்மதா நதியை வழிபட உரிய வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் திங் விஜய் சிங் என்பதுதான், அதனால் சாமியார்கள் அவருக்கே ஆதரவு அளிப்போம் என்று கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து  ஹட் யோகம் என்ற ஒரு யாகத்தை கம்ப்யூட்டர் பாபா நடத்தினார். அவருடன் சுமார் 7 ஆயிரம் சாமியார்களும் கலந்து கொண்டு யாகத்தை நடத்தினர். இதில். திக்விஜய் சிங்கும் இதில் பங்கேற்றார். இந்த கூட்டு, யோகம், திக்விஜய்சிங் வெற்றிக்காக நடத்தப்பட்டதாக பாபா தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக பாரதியஜனதா கட்சி அரண்டுபோய் உள்ளது. இந்துக்களின் வாக்குகளை பெறலாம் என நினைத்து பெண் சாமியாரை களமிறக்கினால், அவருக்கு எதிராக ஏராளமான ஆண் சாமியார்கள் களமிறங்கி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.