கட்சி உறுப்பினர் பதவி ராஜினாமா: சஜ்ஜன் குமார் ராகுலுக்கு கடிதம்

டில்லி:

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் டில்லி காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, சஜ்ஜன் குமார் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப் பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. டில்லியில் நடைபெற்ற கலவரத்தில், பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில், அப்பபோதைய டில்லி மாநில காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமார் குற்றவாளி என டில்லி உயர்நீதி மன்றம் அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து. மேலும் சஜ்ஜன் குமார் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சஜ்ஜன் குமார் தனது காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்த விலகுவதாக காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.