படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பெயரும், புகழும் கிடைத்தது.
லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் சாக்ஷி தன் பழைய புகைப்படம் ஒன்றையும் தற்போதைய புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டு தன் உடல் எடையை குறித்து பதிவிட்டுள்ளார் .


இது நான் தான். இரண்டுமே. முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பது தான் பெரிய சவாலாக இருந்தது. பள்ளியில் என் வகுப்பில் படித்தவர்கள், சீனியர்கள் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள். அதில் சிலர் என்னை புத்தக புழு என்றும், பலர் குண்டு பூசணிக்காய் என்றும் கலாய்த்தனர்.என பதிவிட்டுள்ளார் .