ஆசிய மல்யுத்தம் – வெள்ளி வென்றார் இந்தியாவின் சாக்ஸி மாலிக்..!

புதுடெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஸி மாலிக்.

டெல்லியில் நடைபெற்றுவரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 65 கிகி அரையிறுதிப் போட்டியில், உஸ்பெஸ்கிஸ்தானின் நபிராவை எதிர்கொண்டார் இந்தியாவின் சாக்ஸி மாலிக்.

இதில், துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சாக்ஸி, 5-4 என்ற கணக்கில் நபிராவை தோற்கடித்தார். இதனையடுத்து, தங்கத்தைக் கைப்பற்றும் இலக்குடன் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நயோமியை எதிர்கொண்டார்.

ஆனால், இப்போட்டியில் ஜப்பான் வீராங்கனையிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார் கடுமையாக முயன்ற இந்திய வீராங்கனை. இதனையடுத்து சாக்ஸி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும், 53 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் 57 கிகி எடைப்பிரிவில் இந்தியாவின் அன்சு மாலிக் ஆகியோர் வெற்றிபெற்றனர்.