சக்திகாந்த தாஸ் நியமனம்: மோடிஅரசுக்கு சுப்பிரமணியசாமி எதிர்ப்பு

டில்லி:

ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டது சரியானது அல்ல என்று மோடி தலைமையிலான மத்திய அரசு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தன்னாட்சி பெற்ற ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் மத்தியஅரசு தலையிடுவதன் காரணமாக, ஏற்கனவே ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்து ரகுராம் ராஜன் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த திங்களன்று  உர்ஜித் படேலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக முன்னாள் நிதித்துறை செயலாள ரான  சக்திகாந்த தாஸை (61) மத்திய அரசு நேற்று நியமனம் செய்தது.  இதையடுத்து அவர் இன்று (புதன்கிழமை ரிசர்வ்) வங்கியின் 25-ஆவது ஆளுநராக பதவியேற்றார்.

இந்த நிலையில், சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டது தவறான முடிவு என்று பாஜக தலைவர் களில் ஒருவரான சுப்பிரமணியசாமி போர்க்கொடி தூக்கி உள்ளார்.

சக்தி காந்த தாஸ், முன்னள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், பல வழக்குகளில் இருந்து  ப.சிதம்பரத்தை காப்பாற்றி இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

சக்திகாந்த தாஸ் நியமனம் எப்படி முடிவு செய்யப்பட்டு என்று தனக்குத் தெரியவில்லை என்ற சாமி,  அவரது நியமனத்துக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.