டெல்லி:

பிரபல எழுத்தாளர் சோ.தர்மனின் ‘சூல்’ நாலுக்காக அவருக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழில் சிறந்த நாவலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு அவரது நாவல் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி அருகே உள்ள உருளைக்குடி பகுதியை சேர்ந்தவர் தர்மன். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர் எழுத்தாளர் சோ.தர்மன்.  சோ.தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ.தர்மன் என்ற பெயரில் நாவல்களை எழுதி வருகிறார்.

இவர் சூல் உள்பட, ஈரம், தூர்வை, சோகவனம் உள்பட 7 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது “கூகை” என்ற நாவலுக்காக ஏற்கனவே தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கத.

விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள  தர்மன், ‘என்னுடைய நாவலுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. நான் நடிகன் அல்ல. நான் எழுத்தாளன். நான் சூரியகாந்தி போல இல்லாமல், ஒரு மூலிகை போல இருப்பேன். எந்த விளம்பரமும் இல்லாமல் பணியாற்றி வருகிறேன். அங்கீகாரம் கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது’ என்று தெரிவித்தார்.