மும்பை: 
வேலைக்கு செல்பவர்களின் சம்பளம் அவர்கள் படிக்கும்  கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
இந்தியாவில் கல்லூரிகள் படித்த பட்டதாரிகள்  மற்றும் தொழில்நுட்ப பட்டத்துடன் கூடிய முதுகலை மாணவர்கள்  படிப்பு முடித்துவிட்டு, வேலைக்கு செல்லும்போது அவர்களுக்கு வழங்கப்படும் கல்லூரிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
1ctae-interview
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு டயர்-1, டயர்-2, டயர் -3 என்று கல்லூரிகள் தரவரிசையாகப் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு ஏற்பவே அக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வந்த மாணவர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுவதாக  வாட்சன் என்ற நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது
இதில் டயர்-1 கல்லூரிகளில் பயின்ற இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டாதாரிகள் இதே படிப்பை டயர்-3 கல்லூரிகளில் படித்த அதே அனுபவமுள்ள நபரைவிட 3 மடங்கு சம்பளம் அதிகமாகப் பெறுவதாகவும், டயர்-1 கல்லூரியில் பயின்ற எம்.பி.ஏ மாணவர் டயர்-3 கல்லூரி மாணவரைவிட நான்குமடங்கு அதிக சம்பளம் வாங்குவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
கேம்பஸ் இண்டர்வியூவில் 72% பி.டெக் மாணவர்களும். 30% எம்.டெக் மாணவர்களும், 63% எம்.பி.ஏ மாணவர்களும், மற்ற துறைகளிலிருந்து 34% மாணவர்களும் தெரிந்தெடுக்கப்படுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. இளங்கலை பெற்றவர்களைவிட முதுகலை பயின்றவர்கள் 16% அதிக சம்பளம் பெறுவதாக தெரியவருகிறது.