லக்னோ:

.பி. மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில் உள்ள ராம்லல்லா ராமர் கோவிலை நிர்வகித்து வரும் ஊழியர்களுக்கு யோகி அரசு சம்பள உயர்வு அளித்து உள்ளது.

அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி தளத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக கோயிலின் தலைமை பூசாரி  மற்றும் எட்டு ஊழியர்களின் மாத சம்பளத்தை உ.பி. அரசு உயர்த்தியுள்ளது.

1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு பராமரிப்பாளர்  ராம் லல்லா மற்றும் தற்காலிக கோயில் வளாகத்தை கவனித்து வருகிறார். அதன்படி அந்த கோவிலை நிர்வகிக்கும் வகையில்  தலைமை பூசாரி மற்றும் எட்டு ஊழியர்களின் பணியாற்றி வருகின்றனர். அவர்களின்  மாத சம்பளத்தை உ.பி. அரசு உயர்த்தியுள்ளது.

மேலும், அந்த கோவிலின் நிர்வாக செலவுக்காக மாதந்திரம் கொடுக்கப்பட்டு வந்த 26,200 ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், அதுபோல ‘போக்’ (பிரசாதம்) செலவுக்கு வழங்கப்பட்டு வரும் பணமுத் ரூ..800 உயர்த்தப்பட்டு இருப்பதாக அயோத்தி பிரதேச ஆணையர் மனோஜ் மிஸ்ரா தெரிவித்து உள்ளார். மேலும், இந்த சம்பள உயர்வானது,  உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் ராம் ஜன்மபூமி வழக்குக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

ராமர்கோவிலின் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் தற்போது  மாத ஊதியமாக ரூ .13,000 பெறுகிறார். தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைவருக்கும் ரூ.500 அதிகம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. கோவிலின் மற்ற ஊழியர்கள்  ரூ .7,500 முதல் ரூ .10,000 வரை சம்பளம் பெற்று வருகிறார்.

இவர்கள் தங்கு சம்பளம் போதவில்லை என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில்,தற்போது ரூ.500 உயர்த்தப்பட்டு உள்ளது. இது 1992 க்குப் பிறகு தற்போதுதான் இவ்வளவு அதிகமான அளவு சம்பள உயர்வு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் ராம்லல்லா பூசாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.