சென்னை:

மிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 7வது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி  சம்பள உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாக  போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுனர், நடத்துனர் அல்லாத அதிகாரிகள், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை படி, ஊதிய உயர்வும், பணப்பலன்களும் வழங்கப்படுவதாகவும், இந்த சம்பள  உயர்வை, போக்குவரத்து கழகங்களே ஏற்க வேண்டும் எனவும் கூறி உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று நிதித்துறை கூடுதல் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசின்  பொறுப்பு தலைமை செயலாளராக உள்ள நிதித்துறை கூடுதல் செயலாளர் சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  கடந்த 1.1.2006 அன்று பணியில் சேர்ந்த அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களின் சம்பளம் சமமாக இருக்கும் விதத்தில் 2.44 மடங்கு சம்பள உயர்வு போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு நடை முறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இருவருக்கும் ஒரேயளவு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு டிரைவருக்கு 1.1.2006 அடிப்படை சம்பளம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது, ஒரு மடங்கு உயர்த்தப்பட்டது. 1.1.2016 சம்பளத்துடன் இணைக்கப்பட்ட அகவிலைப்படி 125 சதவீதம். அதாவது 1.25 மடங்கு. ஊதிய உயர்வு 32 சதவீதம். அதாவது 0.32 மடங்கு. மொத்த உயர்வு 257 சதவீதம். மொத்த மடங்கு 2.57
போக்குவரத்து கழக டிரைவருக்கு 2007ல் ஊதிய உயர்வு 15 சதவீதம்.

அதாவது 0.15 மடங்கு. 2010ல் ஊதிய உயர்வு 24 சதவீதம். அதாவது 0.24 மடங்கு. 2010ல் அடிப்படை சம்பளம் அளவு 100 சதவீதம். அதாவது 1.0 மடங்கு. 2013ல் ஊதிய உயர்வு 5.5 சதவீதம்.

அதாவது 0.055 மடங்கு. மொத்தமாக 2016ல் மாற்றியமைக்கப்படும் ஊதியம் 257.42 சதவீதம். அதாவது 2.5742 மடங்கு. அரசு ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் 1.1.2016 வரை ஊதிய உயர்வு 2.57 மடங்கு.

இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2010 முதல் 2016 வரை அதாவது, 6 ஆண்டுகளில் ஊதிய உயர்வு 2.57 மடங்கு.

தொழிற்சங்கங்கள் கோருவது 2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகளில் கோரும் சம்பள உயர்வு 2.57 மடங்கு 1.10.2017 அன்று 1.1.2016ல் பணி நிரந்தரம் பெற்ற அரசு ஓட்டுநர் சம்பளம் ரூ.33,930, போக்குவரத்துக் கழக ஓட்டுநர் சம்பளம் – ரூ.34,077.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.