சென்னை:

சென்னை முதல் சேலம் வரை 8வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

சென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து, மத்தியஅரசு சார்பில்  தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டதோடு, இது சம்பந்தமாக பதில் அளிக்க மத்திய, மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் வனத்துறைக்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு வழக்கை இன்று விசாரிக்கிறது.